அவங்கள மாதிரி ஹாலிவுட் போக நான் என்ன லூசா?: நடிகை பொளேர்

Bookmark and Share

அவங்கள மாதிரி ஹாலிவுட் போக நான் என்ன லூசா?: நடிகை பொளேர்

தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா போன்று ஹாலிவுட் செல்ல தான் ஒன்றும் முட்டாள் இல்லை என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். 

பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். பிரியங்கா ஹாலிவுட் டிவி தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். 
இந்நிலையில் ஹாலிவுட் செல்வது பற்றி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறுகையில்,

மேற்கத்திய நாடுகளில் சினிமா தொழில் நொடிந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஹாலிவுட் செல்ல நான் ஒன்றும் முட்டாள் அல்ல. ஆசியாவில் தான் சினிமா துறையின் நிலை நன்றாக உள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் இருந்தது போன்று தற்போது ஆசியாவில் சினிமாவுக்கு நல்ல நிலைமை உள்ளது. பாலிவுட்டுக்கு இது நல்ல நேரம் ஆகும். அதனால் ஹாலிவுட்டை பார்த்து ஏமாற மாட்டேன்.

என் சக நடிககைகள் எல்லாம் உண்மையை பேச அஞ்சுகிறார்கள். பின்விளைவுகளை நினைத்து அவர்கள் உண்மை பேசுவது இல்லை. ஒரு தேவை என்றால் கூட ஆதரவாக வந்து நிற்க மாட்டார்கள்.

பிரபலமாக உள்ள நடிகைகள் கூட உண்மையை பேசினால் தன்னை அனைவரும் வெறுப்பார்கள் என அஞ்சுகிறார்கள். தன்னை அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்காக கூட உண்மையை பேசுவது இல்லை என்று கங்கனா தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை: கங்கனா ரணாவத்
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே
எல்லாமே வெறும் பில்டப் தானா கோப்ப்பால்: ஹீரோவை வம்பிழுக்கும் நடிகை
பிரபல நடிகைகள் யாரும் உண்மை பேசுவது இல்லை: கங்கனா ரனாவத் பேட்டி
வழியில்லாமல் ஆபாசப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்: முன்னணி நடிகை பரபர பேட்டி
எந்த நடிகை விருது வாங்கினால் எனக்கென்ன?: முன்னணி ஹீரோயின் பேட்டி
கார் விபத்தில் உயிர் தப்பிய கங்கனா ரணாவத்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions