நடைபாதையில் படுத்துள்ளேன் - கங்கனா ரணவத்

Bookmark and Share

நடைபாதையில் படுத்துள்ளேன் - கங்கனா ரணவத்

2008ம் ஆண்டு சிறந்த துணை நடிகைகக்கான தேசிய விருதை பேஷன் படத்திற்காகவும், 2014ம் ஆண்டு சிறந்த நடிகைகக்கான தேசிய விருதை குயின் படத்திற்காகவும் பெற்றவர் கங்கனா ரணவத்.

இன்றைய தேதியில் ஹிந்தித் திரையுலகில் திறமைசாலி நடிகையாகப் போற்றப்படுபவர். வித்தியாசமான படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து தன்னை ஒரு வித்தியாசமான நடிகையாக காட்டி வருகிறார்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவருடைய ஆரம்ப காலத்தைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். 

“என்னுடைய வாழ்க்கைப் பயணம் 1000 மைல்களுக்கு அப்பால் இருந்து ஆரம்பமானது. மும்பைக்கு முதல் வகுப்பில் வந்து சேரவில்லை. பேருந்துகளிலும், டாக்சிக்களிலும், டிரைன்களிலும், பல சமயங்களில் நடந்தும்தான் வந்து சேர்ந்திருக்கிறேன். 

எனக்கென வீடு இல்லாத வரையில் நடைபாதையில் கூட படுத்துத் தூங்கியிருக்கிறேன். பல பொறிகளிலும் நான் சிக்கியிருக்கிறேன், அதனால் சிலர் மீது புகாரும் அளித்திருக்கிறேன். வாழ்வின் மோசமான பக்கங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதே சமயம், குடியரசுத் தலைவரிடமிருந்து இரண்டு முறை தேசிய விருதும் வாங்கியிருக்கிறேன். 

இப்போது நான்தான் அதிகமான சம்பளம் பெறும் நடிகை.ஒரு சாதாரண சிறிய நகரத்துப் பெண்ணாகத்தான் நான் மும்பைக்கு வந்தேன், எனக்கு எது பற்றியும் தெரியாது.

ஆனால், இன்று என் நிலையே வேறு. ஆரம்ப நாட்களில் எனக்கு எதிரா நடந்த விஷயங்கள் அனைத்துமே எனக்கு சாதகமாக அமைந்துவிட்டன. நீங்கள் எப்படி யோசிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்களை நீங்கள் நேசியுங்கள், அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

அனைத்தையும் ஒரு வரமாக எடுத்துக் கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தேன். என் முடி ஏன் சுருளாக இருக்கிறது, எனக்கு ஏன் நீலநிறக் கண்கள் இல்லை, ஏன் நான் 5 அடி 11 அங்குலமாக இல்லை, என எனக்கு ஏற்பட்ட தடைக்கற்களை வரமா எடுத்துக் கொண்டேன், அனைத்துமே மாறியது,” என கங்கனா ரணவத் சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும் சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் உத்வேகமான வார்த்தைகள். அவர் ஏன் இரண்டு தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார் என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா... 


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions