ரூ.11 கோடி சம்பளம் பெறும் நடிகை கங்கனா ரனாவத்

Bookmark and Share

ரூ.11 கோடி சம்பளம் பெறும் நடிகை கங்கனா ரனாவத்

ஒரு படத்திற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் 11 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். கட்டி பட்டி படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இப்படத்திற்காக, படத் தயாரிப்பாளர்களிடம் இருந்து, இவ்வளவுப் பெரியத் தொகையை இவர் பெற்றுள்ளார். பாலிவுட்டில், நடிகை ஒருவருக்கு கிடைத்த அதிக தொகையாக இந்த தொகை தான்இருக்கும், என்று கூறப்படுகிறது.இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த நடிகை கங்கனா ரனாவத் கடந்த 2006ல், கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தவர் தேசிய விருதுகளை இரண்டு முறை பெற்றுள்ளவர்.

தனு வெட்ஸ் மனு மற்றும் கிரிஷ் - 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பெரும் புகழ் பெற்று  சம்பளமும், கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இப்போது கங்கனா நடித்து வரும், இயக்குனர் நிகில் அத்வானியின், கட்டி பட்டி படத்திற்காக, 11 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

பாலிவுட்டில், ஒரு படத்திற்காக நடிகை ஒருவர் பெறும் அதிகபட்ச சம்பளத் தொகை இது தான். இதுகுறித்து நடிகை கங்கனாவிடம் கேட்பதற்கு, “ஆம், இந்த படத்திற்கு நான், 11 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளேன்.

படத்தில் ஓராண்டாக நடித்து வருகிறேன், என் உழைப்புக்கு இது சரியான தொகை தான்; இது ஒன்றும் அதிகமான சம்பளமில்லை. எனினும், பாலிவுட்டில் அதிக சம்பளம் பெற்ற நடிகை எனும் போது மகிழ்ச்சியாக உள்ளது”, என்கிறார்.

இம்ரான் கான், கங்கனா இணைந்து நடித்துள்ளார் கட்டி பட்டி படம், அடுத்த மாதம், 18ல் வெளியாக உள்ளது. படத்தின் நாயகன் இம்ரான் கான் இவ்வளவு அதிக தொகையை சம்பளமாக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions