தரக்குறைவாக நடத்தினார்கள் தேசிய விருது நடிகை வேதனை

Bookmark and Share

தரக்குறைவாக நடத்தினார்கள் தேசிய விருது நடிகை வேதனை

தீண்டத்தகாதவள்போல் நடத்தப்பட்டேன் என வேதனையுடன் கூறினார் தேசிய விருது வென்ற கங்கனா ரனாவத். ‘குயின்'  இந்தி படத்தில் நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றிருக்கிறார்.

அவர் கூறியது:

கேங்ஸ்டர் இந்தி படத்தில் நடித்தபிறகு என்னிடம் நடிப்பு திறமை குவிந்திருப்பதாக கூறினார்கள். தேசிய விருது என்பது பிராந்திய படங்களின் நடிப்புக்கான கணக்காகவும் எடுத்துக்கொள்ளப்படுவதால் அதை நான் மதிக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் நான் மதிப்பு குறைவாக நடத்தப்பட்டிருக்கிறேன். தீண்டத்தகாத பெண்போல் பாவித்ததுடன் கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர்.

அதற்கு எனது தரப்பிலிருந்து நான் எந்த எதிர்ப்பும் தெரிவித்ததில்லை. நான் பேசும் பாணி, உடை அணியும் தன்மை போன்றவற்றையும் கேலி செய்வார்கள். ஒரு கட்டத்தில் தீவின் நடுவே அகப்பட்டுக்கொண்ட நபர் போலவே என் நிலைமையும் ஆனது. அது எனக்கு பயத்தை கொடுத்தது.

அதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தேன். நடிகை என்ற வகையில் இப்போதுதான் எனக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  பலரும் என்னை வெறுத்து ஒதுங்கியபோது பிரியங்கா சோப்ரா மட்டும் என்னிடம் நன்கு பழகினார். இப்போதைக்கு எனக்கு இருக்கும் ஒரு தோழி அவர்தான்.இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார். 


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions