வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்

Bookmark and Share

வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்

பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மும்பை பாந்த்ரா பாலிஹில் பகுதியில் 3075 சதுர அடி பங்களா வீட்டை ரூ.20.07 கோடி கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்கு பிரகாஷ் என்ற தரகர் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உதவி செய்துள்ளார்.

ஆனால் பேசியபடி கங்கனா ரணாவத் தரகர் கமிஷன் கொடுக்கவில்லை என்று பாந்த்ரா போலீசில் தரகர் பிரகாஷ் புகார் செய்தார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கங்கனா ரணாவத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“பாலி ஹில் பகுதியில் கடந்த வருடம் இந்த பங்களா விட்டை வாங்கினேன். அப்போது புரோக்கர் கமிஷன் ஒரு சதவீதம் என்று பேசி அதற்கான தொகை ரூ.22 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது.

ஆனால் இப்போது இரண்டு சதவீதம் புரோக்கர் கமிஷனாக மேலும் ரூ.22 லட்சம் கேட்கின்றனர். இதற்காக என்னை தொந்தரவு செய்கிறார்கள். இதுகுறித்து போலீசாரிடம் தெளிவுபடுத்தி உள்ளோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions