காதலை சொன்னதுக்கு இப்படியா செய்வாங்க? பிரபல நடிகை காட்டம்

Bookmark and Share

காதலை சொன்னதுக்கு இப்படியா செய்வாங்க? பிரபல நடிகை காட்டம்

நடிகைகள் சொந்த வாழ்க்கை பற்றிய செய்தியென்றால் உடனே அது சென்சேஷனாகிவிடுகிறது. அப்படி பலமுறை சர்ச்சைகளில் சிக்கியவர் கங்கனா ரணாவத்.

நடிகர் ஹிரித்திக் ரோஷனை காதலிப்பதாக கூறி அவருக்கு கங்கனா அனுப்பிய இ-மெயில் லீக் ஆனதால் சிக்கலில் மாட்டினார் கங்கனா.

தற்போது ஒரு பேட்டியில் "நீங்கள் கடைசியாக ஷாக் ஆன தருணம் எது?" என கேட்டதற்கு, "காதலில் விழுந்ததற்காக.. நோட்டீஸ் வந்தபோதுதான்" என கூறியுள்ளார்.

யார் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், ஹிரித்திக் ரோஷன் பற்றி தான் அவர் கூறுகிறார் என்பது தெரிந்தது.

அப்படி இல்லை என்றால் வேறு யாராவது இவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பார்களோ என நெட்டிசன்கள் ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions