கங்காரு படத்துக்கு தடைகேட்டு வழக்கு

Bookmark and Share

கங்காரு படத்துக்கு தடைகேட்டு வழக்கு

உயிர், சிந்து சமவெளி, மிருகம் படங்களை இயக்கிய சாமி தற்போது இயக்கி உள்ள படம் கங்காரு. வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். புதுமுகம் அர்ஜுனாவுடன் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார்.

இது அண்ணன் தங்கை பாசத்தை பற்றிய படம். தங்கை மீது வெறித்தனமான பாசம் கொண்ட அண்ணன் சைக்கோவாக மாறுகிற சைக்காலஜிக்கல் த்ரில்லர். இன்று (ஏப் 24) படம் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று எஸ்.சிவகுமார் என்பவர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தில் வரம்பு மீறிய உறவுகள் குறித்து காட்சிகள் இருப்பதாகவும், இது தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளதாகவும், பல வக்கிர காட்சிகள் இருப்பதாகவும் சிவகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. படமும் இன்று வெளிவருகிறது.

 


Post your comment





Related News
\'கங்காரு\' வாய்ப்பு என் பாக்யம்: இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ்
உலகுக்கே கலாச்சாரம் சொல்லித் தந்த தமிழினத்தின் பிள்ளைகள் தப்பாக படமெடுப்போமா? - \'கங்காரு\' சுரேஷ் காமாட்சி
கிளிசரின் இல்லாமல் அழுதேன் : பிரியங்கா
சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர்தான்!- தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி குமுறல்
கதைக்கே முதலிடம் கொடுக்கும் கங்காரு பிரியங்கா!
மிருகம் ஆதி கெட்டப்பில் கங்காரு அர்ஜூனா!
தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions