கதைக்கே முதலிடம் கொடுக்கும் கங்காரு பிரியங்கா!

Bookmark and Share

கதைக்கே முதலிடம் கொடுக்கும் கங்காரு பிரியங்கா!

உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற படங்களை இயக்கியவர் சாமி. இதில் மிருகம் படத்தை இயக்கியபோது அப்படநாயகி பத்மப்பிரியாவை படப்பிடிப்பு தளத்தில் அனைவர் முன்னிலையிலும் ஓங்கி அடித்தார்.

அதன்காரணமாக ஓராண்டு அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது. அதையடுத்து, சிந்துசமவெளியை இயக்கினார். அப்படத்தில் மாமனாருடன் கள்ள உறவு வைத்திருக்கும் மருமகளாக நடித்த அமலாபால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இந்தநிலையில், அதே சாமி தற்போது இயக்கியுள்ள கங்காரு படத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார். ஆனால் அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் படம் என்பதால் பாசக்கார தங்கச்சியாக நடித்துள்ளார்.

இதுபற்றி பிரியங்கா கூறும்போது,

டைரக்டர் சாமி படத்தில் நடிக்க வேண்டும் என்றதும் முதலில் எனக்கு பயமாக இருந்தது. அதனால் தயங்கினேன். ஆனால் அந்த படத்தின் கதையை அவர் சொன்னபோது கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

இந்த காலத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை சொல்லும் கதைகள் கிடைப்பதே அரிது என்பதால், உடனே நடிக்க சம்மதித்தேன். அதோடு, அவர் ஸ்பாட்டில் கோபப்படுவார் என்று கேள்விப்பட்டு பயத்துடனேயே நடித்தேன்.

ஆனால் அவர் என்னிடம் கடிந்து கொள்ளவே இல்லை. ரொம்ப பாசத்தோடு நடந்து கொண்டார். அதனால் கங்காரு படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறேன். மேலும், இந்த படத்திற்கு பிறகு சாரல் உள்பட இரண்டு படங்களில் நடிக்கிறேன்.

ஆனால் நடிக்கும் இரண்டு படங்களிலுமே வளர்ந்து வரும் ஹீரோக்களுடன்தான் நடிக்கிறேன். காரணம், இந்த படங்களில் ஹீரோயினிக்கு கதையில் முக்கியத்துவம் உள்ளது.

அதோடு, முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நல்ல கதைகள், நல்ல கதாபாத்திரங்களுக்கு மட்டுமே நான் முதலிடம் கொடுப்பேன் என்கிறார் பிரியங்கா.

 


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions