பட வாய்ப்பு குறைந்தது ஏன்?- கனிகா மழுப்பல் பதில்

Bookmark and Share

பட வாய்ப்பு குறைந்தது ஏன்?- கனிகா மழுப்பல் பதில்

பட வாய்ப்பு குறைந்து ஏன் என்றதற்கு மழுப்பலான பதில் அளித்தார் பைவ் ஸ்டார் நாயகி கனிகா. அவர் கூறியது:ஒவ்வொரு நாளும் சிறிய குறிக்கோளை நிறைவேற்ற தொடர்ச்சியாக போராட்டம் நடத்துகிறோம். சில சமயம் அதை ஏன் செய்கிறோம் என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.

ஜாலியாக வீட்டில் உட்கார்ந்துகொண்டு குழந்தையை வளர்த்தபடி பொழுதை கழிக்கலாமே என எண்ணலாம். ஆனால் எனக்கென்று கனவும், நோக்கமும் உள்ளது. அதற்காக நிறைய தியாகம் செய்வதுடன் உணர்வுபூர்வமான வலிகளும் அனுபவிக்க வேண்டும்.

இவ்வளவுக்கு பிறகு அந்த நோக்கம் நிறைவேறினால் ஏதோ ஒன்றை சாதித்ததுபோல் உணர முடியும். அடுத்து என்ன படம் செய்கிறீர்கள் என்கிறார்கள். ஒவ்வொரு படம் முடித்தபிறகும் நான் சில காலம் பிரேக் எடுத்துக்கொள்கிறேன்.

நடிப்பதற்கு தயாராகிவிட்டதாக உணர்ந்தபிறகே அடுத்த படத்தை ஒப்புக்கொள்கிறேன். அப்படி செய்வதுதான் எனது விருப்பம். இவ்வாறு கனிகா கூறினார். மார்க்கெட் டல்லடித்த பிறகு சில ஹீரோயின்கள் நிறைய படங்களை நான் ஒப்புக்கொள்வதில்லை என்று சொல்லும் மழுப்பலான பதிலைத்தான் கனிகாவும் சொல்கிறார் என்று கோலிவுட்காரர்கள் முணு முணுக்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions