உதவி கமிஷனராக மாறினார் கனிகா!

Bookmark and Share

உதவி கமிஷனராக மாறினார் கனிகா!

தமிழ்ப்படங்களை விட மலையாளத்தில் பெண் போலீஸ் கதாபாத்திரங்கள் ரொம்பவே போல்டாக சித்தரிக்கப்படுவதுண்டு. குறிப்பாக தெலுங்கில் விஜயசாந்தி போல மலையாளத்தில் வாணி விஸ்வநாத் ரொம்பகாலம் போலீஸ் கேரக்டர்களில் நடித்தார்.
ஷோபனா, சிந்து மேனன் ஆகியோரும் ஆக்ரோஷ போலீசாக நடித்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சமீபத்தில் பாலிடெக்னிக் என்கிற படத்தில் நடிகை பாவனா கூட சிரிப்பு போலீசாக நடித்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்.
இப்போது போலீஸ் கேரக்டரில் நடிப்பது கனிகாவின் டர்ன்.. டைரி என்கிற படத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஒரு டான்சரின் மரணத்தை துப்புத்துலக்கும் போலீஸ் அதிகாரி வேடம் தான் இவருக்கு.
இதுவரை சாப்ட்டான கேரக்டரிலேயே பார்த்து பழகிய கனிகா, போலீஸாக செட்டாவாரா என சந்தேகம் வேண்டாமாம். உதவி  கமிஷனர் மீரா நந்தனாக சரியாக அந்த கேரக்டரில் பொருந்தியுள்ளார் என்கிறார் படத்தை இயக்கும் மஜீத் மானசேரி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions