குடைச்சல் கொடுத்த குட்டைப்பாவாடை!

Bookmark and Share

குடைச்சல் கொடுத்த குட்டைப்பாவாடை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிகா குட்டைப் பாவாடை அணிந்து போஸ் கொடுத்த போட்டோவை தனது சமூக வளைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அவ்வளவுதான், 'நெட்'டிசன்கள் கழுவிக் கழுவி ஊற்றிவிட்டார்கள்.

இந்த வயசுக்கு மேல இது தேவையா? இப்படி போஸ் கொடுக்குறீங்களே, உங்களுக்கு வெட்கமில்லையா, மானமில்லையா? நீயெல்லாம் ஒரு தாயா? என்று போட்டுத் தாக்கிவிட்டார்கள்.  இதைக் கண்டு கொதித்துப்போனார் கனிகா.

எல்லாவற்றையும் விட ஒரு நெட்டிசன் உங்களை நல்லவங்கன்னு நினைச்சிருந்தேன் என்று சொன்னதுதான் கனிகாவை சூடாக்கியது. 'அப்டின்னா ஸ்கர்ட் அணிந்துவிட்டால் நான் தப்பானவளா? நான் எந்த உடை அணியணுங்கிறத தீர்மானிக்கிறதுக்கு நீங்க யார்? எந்த சூழ்நிலை யில் எந்த டிரஸ் போடணும்னு எனக்குத் தெரியும். மற்றவங்க எனக்கு அதைச் சொல்லித் தரவேண்டாம். ஸ்கர்ட் போட்டா தப்பா? ஹவாய் தீவுக்கு டூர் போனா தளையத் தளைய பட்டுப்புடவை கட்டிட்டுப் போவீங்களா?

நான் 50 வயதிலும் ஸ்கர்ட் அணிவேன். என் கணவர், உறவினர்களுக்கு என்னைத் தெரியும். மற்றவர்கள் பற்றி அக்கறை இல்லை. இனிமேலாவது பெண்களை அவர்கள் அணியும் உடையை வைத்து தீர்மானிக்காதீர்கள். அவர்களின் செயலை வைத்து தீர்மானியுங்கள்'' என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அடுத்த குஷ்பு ரெடியாயிட்டாங்கடோய்!


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions