செவ்வாய் தோஷம் உள்ளவரா கனிகா..?

Bookmark and Share

செவ்வாய் தோஷம் உள்ளவரா கனிகா..?

'ஆட்டோகிராப்' மூலமா தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த கனிகா, திருமணம் செய்துகொண்டபின் செலக்டிவான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.. நான்கு வயது பையனுக்கு அம்மாவாகிவிட்ட அவருக்கு, கடந்த வருடத்தில் மலையாளத்தில் அவர் நடித்த 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் நிறைய பாராட்டுகளை வாங்கி தந்தது.

தற்போது சுரேஷ்கோபி ஹீரோவாக நடிக்கும் 'ருத்ர சிம்ஹாசனம்' படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்துவருகிறார். கதைப்படி கனிகா செவ்வாய் தோஷம் கொண்ட பெண்ணாக நடித்திருக்கிறார்.

அதாவது தனக்கு திருமணம் ஆகுமா ஆகாதா என்கிற குழப்பமான நிலையில், யாரோ சில சாமியார்கள் சொல்படி, அவர்கள் குடும்பத்தினர் சொல்லும் பரிகாரங்களை பின்பற்றுவாராம்.

ஆனால் இறுதியில் அவரது திருமணம் எப்படி நடக்கிறது என்பது தான் சஸ்பென்சாம். இதற்காக கேரளாவில் உள்ள ஒட்டப்பாலம் என்கிற இடத்தில் வரிக்காசேரி அரண்மனையில் நடைபெற்ற படப்பிடிப்பில் தொடர்ச்சியாக கலந்துகொண்டார்.

துரோணா, மைலாஞ்சி மோஞ்சுள்ள வீடு படங்களை தொடர்ந்து கனிகாவின் மனதுக்கு பிடித்த இந்த லொக்கேஷனில் இவர் நடிக்கும் மூன்றாவது படம் இது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions