ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அதர்வாவின் கணிதன் டீசர்!

Bookmark and Share

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அதர்வாவின் கணிதன் டீசர்!

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஈட்டி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இவர் அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் ‘கணிதன்’  படத்தின் டீசர்  வெளியிட்டுவுள்ளனர்.

கணிதன் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படப்புகழ் கேத்ரீன் தெரசா நடிக்கிறார். மேலும், இயக்குனர் கே.பாக்யராஜ், நரேன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றன்ர். டி.என்.சந்தோஷ் இயக்கியிருக்கிறார்.

டிரம்ஸ் சிவமணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த வருடத்தில் படம் வெளியாகும் என தெரிகிறது. 

இப்படத்தின் தலைப்பான ‘கணிதன்’ என்றால், கணக்கு பார்ப்பவனாம். வீரத்துடன் இருக்கிறவர்களை வீரன் என்று சொல்வதுபோல், கணக்கு பண்ணி வாழ்கிறவனை கணிதன் என்று அழைப்பார்களாம்.

இப்படத்தில் அதர்வா எதையும் திட்டம் போட்டு கணக்காக செய்பவராம். அவரது கணக்கும் ஒரு இடத்தில் தப்பாகிறது. அதை அவர் எப்படி சரிசெய்தார் என்பதுதான் இப்படத்தின் கதையாம். 

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கணிதன் ரீமேக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
கணிதன் முதல் 3 நாள் வசூல் விவரம்!
ஆறாது சினம், கணிதன் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
ஹிந்தி, தெலுங்கில் ரீமேக்காகும் கணிதன்!
கணிதன் சென்னை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
450 திரையரங்குகளில் வெளியாகும் கணிதன்!
450 தியேட்டர்களில் கணிதன்!
ஜீவாவுடன் மோதும் அதர்வா!
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற கணிதன்!
கணிதனை பாராட்டிய விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions