மலையாளத்தில் கவனம் செலுத்தும் கஞ்சா கருப்பு..!

Bookmark and Share

மலையாளத்தில் கவனம் செலுத்தும் கஞ்சா கருப்பு..!

பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தங்களது மொழி தாண்டி மற்ற மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்பதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது. தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து நகைச்சுவையில் கலக்கி வரும் பிரமானந்தம் போன்ற ஒரு சில அரிதான விதிவிலக்குகள் மட்டுமே உள்ளனர்.

அந்த வகையில் மலையாள திரையுலகம் தமிழ் காமெடி நடிகர்களை இருகரம் கூப்பி வரவேற்கவே செய்கிறது. அப்படித்தான் மோகன்லாலின்  சினேக வீடு  படத்தில் அப்புக்குட்டிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் காமெடி நடிகர் கஞ்சா கருப்புவுக்கு மோகன்லால் நடித்த   என்னும் எப்பொழு  படத்தில் ஆட்டோ ட்ரைவர் வேடம் கிடைத்தது. அதில் மோகன்லாலை சந்தேகப்பட்டு வேவு பார்க்கச்செல்லும் அமலாபாலை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சவாரி செல்லும்போது அமலாபாலிடம் மாட்டிகொண்டு முழிப்பவராக பிரமாதமாக நடித்திருந்தார்.

 அடுத்ததாக சமீபத்தில் மலையாளத்தில் வெளியான  மதுர நாராங்கா  படத்திலும் இலங்கையை சேர்ந்த தமிழராக படத்தின் ஆரம்ப காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கஞ்சா கருப்பு.

தொடர்ந்து மலையாள படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயாராகவே இருக்கிறாராம். இந்த இரண்டு படங்களிலுமே கஞ்சா கருப்பு அவரது பாணியிலேயே தமிழில் பேசி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?
விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா
கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் புகார்!
அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயார்: கஞ்சா கருப்பு
கஞ்சா கருப்பு - மலையன் கோபி சமாதானம்!
“நட்பு”க்காக ஹோட்டல் பிஸினஸில் குதிக்கும் “கருப்பு”!
நான் எப்போதும் காமெடியன்தான்! -கஞ்சா கருப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions