கன்னா பின்னா : பாடிபில்டர்களின் நகைச்சுவை கதை!

Bookmark and Share

கன்னா பின்னா : பாடிபில்டர்களின் நகைச்சுவை கதை!

சிவசுப்ரமணியன், ஸ்ரீநிவாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.பிக் சினிமாஸ் வழங்கும் படம் "கன்னா பின்னா".  தியா என்பவர் இப்படத்தை இயக்கி நடிக்கிறார். ஹீரோயினாக அஞ்சலி ராவ் நடிக்கிறார்.

இப்படம் பற்றி இயக்குநர் தியா கூறியதாவது,

பொதுவாக  பாடிபில்டர்களை சினிமாவில்  அடியாள் கதாபாத்திரங்களுக்கும், வில்லன் கதாபாத்திரங்களுக்குமே பயன்படுத்தி வருவார்கள். அதிலிருந்து மாறுபட்டு முழுக்க, முழுக்க அனைத்து  பாடி பில்டர்கலையும் நகைச்சுவை கதாபாத்திரங்களாக படம் முழுவதும் நடிக்க வைத்திருக்கிறோம்.

பார்ப்பதற்கு பிரமாண்டமான உடலமைப்பில் காட்சியளிக்கும் இந்த உடற்கட்டு வீரர்கள் பெரும்பாலும் குழந்தை தனமாகவும், நகைச்சுவையானவர்களாகவும் தான் இருக்கிறார்கள், அப்படிபட்டவர்களின் வாழ்க்கையைத்தான்  படமாக்கி இருக்கிறோம்.

தமிழகம்  முழுவதும்  இருந்து  நிறைய  பாடிபில்டர்கள்  இந்த  படத்தில்  நடித்திருக்கிறார்கள். தமிழகம் , மற்றும்  புதுவையில்  படப்பிடிப்பை நடத்தி  முடித்திருக்கிறோம். படப்பிடிப்பை  வேடிக்கை  பார்க்க  வருபவர்கள்  கூட  முதலில் "அடேங்கப்பா  இவ்வளவு  பாதுகாப்பு  வீரர்களா? ".

என்று  வியந்து விட்டு பிறகு  நடிப்பதே இவர்கள் தான்  என்று  தெரிந்து கொண்டு .... முழு  ஒத்துழைப்பு  கொடுத்தார்கள். யூனிட்  ஆட்கள்  மட்டுமல்ல  நடிக்கும்  நடிகர்களும்  கூட  பல  காட்சிகளில்  நடிப்பை  மீறி  சிரித்து கொண்டுதான் இருந்தனர் .. அந்த அளவுக்கு  படம் முழுவதும் நகைச்சுவை  இருக்கிறது.

சில இடங்களில்  படப்பிடிப்பு  நடத்துவதற்கு  எங்களுக்கு  காவல்துறை  ஒத்துழைப்பு  கூட தேவைப்படவில்லை , படம்  யூனிட்  முழுவதும் பாடி பில்டர்களை  பார்த்தோ என்னவோ  எந்த இடையூரும்  எந்த இடத்திலிருந்தும் வரவில்லை என்று  சொல்லும்  இயக்குனரும்  ஒரு பாடி  பில்டர்தான், அதுமட்டுமல்ல  படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்  நண்பர்கள்  இருவரும் கூட  பாடி பில்டர்கள்தான்.

முழுக்க நகைச்சுவைக்கு  முக்கியத்துவம்  கொடுத்து  எடுக்கப்பட்டிருக்கும் "கன்னா பின்னா " எந்த  இடத்திலும்  ரசிகர்களை  சோர்வு  அடைய  விடாமல்  சிரிக்க  வைக்கும்  அளவுக்கு  படம் இருக்கிறது  என்கிறார் இயக்குனர் தியா.


Post your comment





Related News
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்
மூத்த நடிகரை இப்படியா அவமானபடுத்துவது?
நடிகர் வினோத் கன்னா ஆஸ்பத்திரியில் அனுமதி
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
ஹாலிவுட், பாலிவுட் நடிகர்களுக்கு அடுத்து கோலிவுட்டில் விஜய் தான் முதல்- எப்படி தெரியுமா?
போலீசாரால் கைது செய்யப்பட்ட ‘கன்னா பின்னா’ படக்குழுவினர்!
கவியரசு கண்ணணதாசனுக்கு மலரஞ்சலி செலுத்திய இணையதளம் படக்குழு
ரஜினியின் புதிய பட பெயர் கண்ணபிரான்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions