கண்ணதாசன் - எம்.எஸ்.வி., கூட்டணியில் உருவான முக்கியமான பாடல்கள்!

Bookmark and Share

கண்ணதாசன் - எம்.எஸ்.வி., கூட்டணியில் உருவான முக்கியமான பாடல்கள்!

1960களில் கண்ணதாசன் - விஸ்வநாதன், ராமமூர்த்தியின் கூட்டணியில் அமைந்த பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத காவிய பாடல்களாக இன்றும் திகழ்கின்றன. உதாரணத்திற்கு கர்ணன் பட பாடல்கள். பொதுவாக இசையமைப்பாளர்கள், கவிஞர்களிடம் மெட்டுக்கு ஏற்றபடி பாடல் வரிகளை மாற்ற சொல்லி கேட்பார்கள்.. ஆனால் விஸ்வநாதனோ, கண்ணதாசனின் பெரும்பாலான பாடல் வரிகளை அப்படியே தன் மெட்டிற்குள் புகுத்தி, சொல்ல வந்த கருத்தை கவித்துவம் மாறாமல் தன் இசை கோர்ப்பால் அழகு சேர்த்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்றால் மிகையல்ல. உதாரணம் : அவன் தான் மனிதன் படத்தில் இடம்பெற்ற அன்பு நடமாடும் கலைக்கூடமே... பாடல்.

இவர்களது கூட்டணியில் உருவான சில முக்கியமான பாடல்களும், படங்களும்...! உள்ளத்தில் நல்ல உள்ளம்... - கர்ணன் 

மயக்கமா கலக்கமா... - சுமைதாங்கி 

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... - சுமைதாங்கி 

வசந்தத்தில் ஓர் நாள்.... - மூன்று தெய்வங்கள் 

வாழ நினைத்தால் வாழலாம்... - பலே பாண்டியா 

நாளாம் நாளாம் திருநாளாம்... - காதலிக்க நேரமில்லை 

அவள் ஒரு நவரச நாடகம்... - உலகம் சுற்றும் வாலிபன் 

அன்பு நடமாடும் கலைக்கூடமே... - அவன் தான் மனிதன் 

அத்தான் என்னத்தான்... - பாவ மன்னிப்பு 

தெய்வம் தந்த வீடு - அவள் ஒரு தொடர்கதை

ஆறு மனமே ஆறு... ஆண்டவன் கட்டளை 

மலர்ந்து மலராத... - பாசமலர் 

யார் அந்த நிலவு... - சாந்தி உலகம்

பிறந்தது எனக்காக... - பாசம் 

என்னருகே நீயிருந்தால்... - திருடாதே 

நாளை முதல் குடிக்கமாட்டேன்... - நீதி 

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா... - பறக்கும் பாவை 

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே... ஆலயமணி

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... - நெஞ்சில் ஓர் ஆலயம்

உள்ளம் என்பது ஆமை... - பார்த்தால் பசி தீரும்

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் - வீரத்திருமகன்

நெஞ்சம் மறப்பதில்லை... - நெஞ்சம் மறப்பதில்லை

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - போலீஸ்காரன் மகள்

அவள் பறந்து போனாளே... - பார் மகளே பார்

அச்சமென்பது மடமையடா.. - மன்னாதி மன்னன்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்... - கறுப்பு பணம்

அண்ணன் என்னடா தம்பி என்னடா... - பழனி

கண்ணன் எனும் மன்னன் பேரை... - வெண்ணிறாடை

நிலவே என்னிடம் நெருங்காதே... - ராமு

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது... - சூர்யகாந்தி


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions