தமிழ் திரையிசைக்கு இன்று பிறந்த நாள்

Bookmark and Share

தமிழ் திரையிசைக்கு இன்று பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலம் இசை ஆட்சி செய்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் இன்று பிறந்த நாள். எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது 1928ம் ஆண்டு, கண்ணதாசன் பிறந்தது 1927ம் ஆண்டு. இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம்.

இருவரும் ஒரே காலகட்டத்தில் திரைப்படத் துறைக்கு வந்தவர்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கேரளாவிலிருந்து வந்தார். கண்ணதாசன் செட்டி நாட்டிலிருந்து வந்தார்.
25 ஆண்டுகள் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருந்தார்கள். எம்.எஸ்.வி ஆர்மோனிய பெட்டி முன் அமர்ந்து ஸ்வரம் போட எதிரில் கண்ணதாசன் அமர்ந்து பேனா பிடித்து வார்த்தை போட அங்கு பிறந்த ஆயிரக்கணக்கான இறவா புகழ்பெற்ற பாடல்கள் இப்போதும் காற்றில் கலந்து நம் செவிகளை நனைத்துக் கொண்டிருக்கிறது.

அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்.... அத்திக்காய் காய் ஆலங்கலாய் வெண்ணிலவே..., பார்த்தேன் சிரித்தேன்... என இசையும் பாடலும் புரிந்த மாயாஜாலங்கள் அவர்களுக்கு பிறகு நிகழவே இல்லை. இன்றைக்கு மெட்டுப்போட மூட் வரவேண்டும் என்று இசை அமைப்பாளர்களும், பாடல் எழுத வேண்டும் என்று பாடலாசிரியர்கள் வெளிநாட்டுக்கு தனிமை வேண்டி ஓடுகிறார்கள் மெல்லிசை மன்னர் ஸ்வரம் சொல்ல அடுத்த நிமிடமே கவியரசர் பாடிய சிப்பி இருக்குது முத்துமிருக்குது... மாதிரியான பாடல்கள், மிமிக்ரிக்கு கடவுள் அமைத்து வைத்த மேடை என்று பாடல் எழுதிய வித்தை இனி யாருக்கும் கைவரப்போவதில்லை.

"கண்ணதாசன், எம்.எஸ்.வி, நான் மூன்று பேரும் அடுத்த ஜென்மத்தில் ஒரே தாய் வயிற்றில் பிறக்க வேண்டும்" என்று நெகிழ்ந்தார் கானக்குயில் லதா மங்கேஷ்கர்.
கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் வரும். எல்லாம் பாடலுக்கானதாக இருக்கும். பல மாதங்கள் வரை இருவரும் பேசாமல் இருந்திருக்கிறார்கள். இவரையும் இறுதியில் சேர்த்து வைத்துவிடுவார் எம்.ஜி.ஆர்.

இருவருமே தங்கள் காலத்தில் பணத்தை பெரிய விஷயமாக கருதவில்லை. பாடல், சுயமரியாதை, புகழ் இதுவே போதுமென்றிருந்தார்கள். இருவரின் உழைப்புக்குரிய அங்கீகாரத்தை திரையுலகமும் சரி, வெளியுலகமும் சரி தரவே இல்லை. இன்று காமெடியன்கள் வாங்கும் தேசிய விருதுகூட எம்.எஸ்.விக்கு கிடைக்கவில்லை.

இருவருக்கும் இன்று பிறந்தநாள் நிச்சயம் திரையுலகம் கொண்டாடப்போவதில்லை. அவர்களின் சங்க சண்டையே பெரிதாக இருக்கிறது. அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. அரசாங்கம் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளும், சில சிறிய அமைப்புகள் தங்கள் சக்திக்கேற்ப கொண்டாடும்.

தமிழகமே கொண்டாடும் இந்த இசை மாமேதையில் கண்ணதாசனை காலம் கவர்ந்து சென்று விட்டது. மெல்லிசை மன்னர் நம்மோடு இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதும் பெருமை. மண்ணுலகில் மெல்லிசை மன்னரும், விண்ணுலகில் கவிரயரசரும் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.


Post your comment

Related News
ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதன் காலமானார்
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் : விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்தவர்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்
அபாயகட்டத்தை தாண்டினார் மெல்லிசை மன்னர்
யுவனுடன் இணந்து ஆடிப்பாடிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசையமைத்த‌ எம்.எஸ். விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
கலைஞர்... ஜெயலலிதா.. எம்எஸ்வியை பாராட்டி பேசிய ரஜினிகாந்!
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பத்ம பூசன விருது வழங்காத மத்திய அரசு ஜெயல‌லிதா குற்றச்சசாட்டு!
பழைய‌ பாடல்களை ரீமேக் செய்பவர்களுக்கு சாட்டை அடி கொடுத்த எம்.எஸ் விஸ்நாதன்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions