நடிகர் கபில் சர்மா அலுவலகத்தில் வன அதிகாரிகள் திடீர் ஆய்வு

Bookmark and Share

நடிகர் கபில் சர்மா அலுவலகத்தில் வன அதிகாரிகள் திடீர் ஆய்வு

இந்தி நகைச்சுவை நடிகரும், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆன கபில் சர்மா, மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது.

தவிர, சதுப்பு நிலக்காடுகளை அவர் அழித்து ஆக்கிரமித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் அவரை சந்தித்து ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக டுவிட்டரில் கபில் சர்மா தகவல் தெரிவித்தார். ஆனாலும், அந்த அதிகாரியின் பெயரை குறிப்பிடவில்லை. இந்த விவகாரத்தில், சிவசேனா, மராட்டிய நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் கபில் சர்மாவுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தன.

பரபரப்பான இந்த தருணத்தில் வெர்சோவாவில் உள்ள கபில் சர்மாவின் அலுவலக வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை வனத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர்.

இதுபற்றி உதவி வன பாதுகாவலர் மாக்ரந்த் கோத்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

இப்பகுதியில் கபில் சர்மா மட்டுமின்றி 50 முதல் 60 பிளாட் உரிமையாளர்களும் விதிமுறைகளை மீறியது ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இங்குள்ள குடியிருப்புவாசிகள் அனைவரும் சதுப்பு நிலக்காடுகளை அழித்து கட்டிடங்களை எழுப்பி இருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி அறிக்கை தயார் செய்து கலெக்டரிடம் தாக்கல் செய்வோம். அவர் முடிவு எடுப்பார். இவ்வாறு மாக்ரந்த் கோத்கே தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் மும்பை மாநகராட்சி உதவி என்ஜினீயர் அபய் ஜெக்தாப் அளித்த புகாரின்பேரில், கபில் சர்மா மீது ஓஷிவாரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து கபில் சர்மாவை அழைத்து விசாரிக்க உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions