கப்பல் 50வது நாள் விழா: கேக் வெட்டி கொண்டாடினார்கள்

Bookmark and Share

கப்பல் 50வது நாள் விழா: கேக் வெட்டி கொண்டாடினார்கள்

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கார்த்திக்.ஜி.கிரிஷ் இயக்கிய படம் கப்பல். வைபவ், சோனம் பாஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ், அர்ஜுனன் நடித்திருந்தனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார், நடராஜன் சங்கரன் இசை அமைத்திருந்தார்.

குறைந்த பட்ஜெட்டில் ஐ ஸ்டூடியோ எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்த படத்தை ஷங்கர் தனது எஸ் பிக்சர்சுக்கு வாங்கியதும் பெரிய படமாக மாறியது. பிரமாண்ட பாடல் வெளியீட்டு விழா, மலைக்க வைக்கும் விளம்பரங்கள் என டாப் ஹீரோ படங்களுக்கு இணையான பரபரப்புடன் படம் வெளிவந்தது.

ஆனால் இத்தனை பில்டப்புகளுக்கு உரிய படமாக அது அமையவில்லை. என்றாலும் பரவாயில்லை என்ற இடத்தை பிடித்தது. ஆனாலும் படத்தின் 50வது நாள் விழாவை கொண்டாடிவிட்டார்கள்.

சென்னையில் உள்ள தனியார் நகைக்கடையில் கேக் வெட்டி கப்பலின் 50வது நாளை கொண்டாடினார்கள். இதில் ஹீரோயின் சோனம் பாஜ்வா, இயக்குனர் ஷங்கர்  தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். கப்பல் டீம் இணைந்து விரைவில் அடுத்த படத்தை எடுக்க இருக்கிறது.


Post your comment





Related News
கப்பல் நாயகியின் வாய்ப்பை பறித்த சிம்புவின் நாயகி..!
திருநீறு வாங்கிக் கொடுத்த வாய்ப்பு: வெங்கட் சுந்தர் நெகிழ்ச்சி
கோயம்புத்தூர் To கோடம்பாக்கம் – ஒரு கப்பல் பயணம்
வெளிநாடுகளில் மீகாமன், கயல், கப்பல் வசூல் நிலவரம்
கிறிஸ்துமஸுக்கு வெளியான படங்களுக்குள் அதிசய \'ஒற்றுமை\'...
ஆபாசமான முன்னோட்டம்... கவிழ்ந்தது கப்பல்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வந்துள்ள மீகாமன், கயல், வெள்ளக்கார துரை, கப்பல்
கரை சேருமா ஆர்யாவின் கப்பல்?
கப்பல் படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் தான் காதலுக்கு எதிரானவன் என்றக் கருத்தை நிராகரித்தார்.
“நல்ல பண்ணிருக்க பூச்சி” என்றார் ஷங்கர் : ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions