கரண் உச்சத்துல சிவாவில் தயாரிப்பாளர்!

Bookmark and Share

கரண் உச்சத்துல சிவாவில் தயாரிப்பாளர்!

நடிகர் கரண் நம்மவர் படத்தில் அறிமுகமானவர். பிறகு பல படங்களில் வில்லன், ஹீரோ என மாறி மாறி நடித்தார். பின்பு பிரபு சாலமன் இயக்கிய கொக்கி படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார். பின்பு படம் வெற்றிபெற்றது. அடுத்த படமான கருப்பசாமி குத்தகைதாரர் படமும் வெற்றிபெற ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.  

பிறகு தம்பி வெட்டோத்தி சுந்தரம், கந்தா, கன்னியும் காதலும் செம காதல்  ஆகிய படங்களில்  நடித்தார். கரண்  தற்போது உச்சத்துல சிவா என்ற படத்தை தானே தயாரித்து நடிக்கிறார்.

"இன்றைய இளைஞர்களின் மனவேகத்துக்கு ஈடுகொடுத்து படம் கொடுக்கும் இயக்குனரைத் தேடிக் கொண்டிருந்தேன். ஜேப்பி கிடைத்தார் படத்தை  தொடங்கி விட்டேன். உறுதிமிக்கவன் உச்சத்தை தொடுவான் என்பதுதான் படத்தின் ஒன் லைன்" என்றார்.  

இதில் கரணுடன் ஆடுகளம் நரேன், இளவரசு, ரமேஷ் கண்ணா, நேகா ஆகியோரும் நடிக்கிறார்கள். வித்யாசாகர் இசை அமைக்கிறார். ஜேப்பி என்ற புதுமுகம் இயக்குகிறார்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
படமாகும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை.!
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்!
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
கர்ணன் படத்தை முதலில் நிராகரித்த விக்ரம், பின்னர் ஒப்புக்கொள்ள இதுதான் காரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions