மும்பையில் நடந்த பிபாஷா பாசு திருமணம்: அமிதாப்பச்சன் நேரில் வாழ்த்து!

Bookmark and Share

மும்பையில் நடந்த பிபாஷா பாசு திருமணம்: அமிதாப்பச்சன் நேரில் வாழ்த்து!

பிரபல நடிகை பிபாஷா பாசுவும், இந்தி நடிகர் கரண்சிங் குரோவரும் இணைந்து ‘அலோன்’ என்ற படத்தில் நடித்தனர். இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. அப்போது, அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்படி, நேற்று முன்தினம் மாலை மும்பையில் பிபாஷா பாசு -  கரண்சிங் குரோவர் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

வங்காள முறைப்படி நடந்த இந்த திருமண விழாவில் இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் பங்கேற்றனர். அன்றைய தினம் மாலை தெற்கு மும்பை பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அபிஷேக்பச்சன், ரன்வீர் கபூர், சஞ்சய் தத், ரித்தேஷ் தேஷ்முக், மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், ஐஸ்வர்யாராய், சுஷ்மிதா சென், தபு, தியா மிர்ஷா, ஜெனிலியா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, அவர்களது முன்னிலையில் பிபாஷா பாசு -  கரண்சிங் குரோவர் தம்பதியினர் ‘கேக்’ வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

37 வயது நடிகை பிபாஷா பாசுவை பொறுத்தவரையில், ஏற்கனவே நடிகர் டினோ மொரியோவுடன் இணைத்து பேசப்பட்டவர். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது.

இது பிபாஷா பாசுவுக்கு முதலாவது திருமணமாக இருந்தாலும், அவரது காதல் கணவரான 34 வயது கரண்சிங் குரோவருக்கு 3 - வது திருமணம் ஆகும். ஏற்கனவே, அவர் டி.வி. நடிகைகள் ஸ்ரத்தா நிகாம், மற்றும் ஜெனிபர் விங்கெட் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions