மகன்களை ஹீரோவாக்கிய வீரத்தாய்

Bookmark and Share

மகன்களை ஹீரோவாக்கிய வீரத்தாய்

எல்லா அம்மாக்களுக்குமே தங்கள் மகன்கள் ஹீரோக்களாகத்தான் தெரிவார்கள். ஆனால் ஒரு அம்மா தன் மகன்களை ஹீரோவாக உருவாக்கி இருக்கிறார். அந்த அம்மா சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சிவாவின் மனைவி லேனி ஹூ.

ஹீரோக்களாகி இருப்பவர்கள் அவரது மகன்கள் கெவின், ஸ்டீபன். கராத்தேகாரன் என்ற படத்தில்தான் கெவினும், ஸ்டீபனும் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள். இவர்களின் அம்மா லேனி ஹூ மகன்களுக்காக கதை, திரைக்கதை எழுதி தானே படத்தை தயாரிப்பதோடு. ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்கிறார். படத்தை இயக்குகிறவர் கணவர் ஸ்டணட் சிவா.

இதுபற்றி லேனி ஹூ கூறியதாவது:

எங்க தாத்தா பச்சை தமிழர். நான் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். என் கணவர் ஸ்ட்ண்ட் இயக்குனராக இருக்கிறார். இந்த சண்டை வாழ்க்கை நம்மோடு போகட்டும் மகன்களை பெரிய படிப்பு படிக்க வைக்கத்தான் ஆசைப் பட்டோம்.

ஆனால் அவர்கள் ரத்தத்திலும் சண்டை கலைதான் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தோம். அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தோம்.

ஜாக்கிசானின் கராத்தே கிட் படம் வந்து வெற்றி பெற்றதால் அதை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு அப்படி ஒரு படத்துக்கு மகன்களை தயார் செய்தேன். நானே அவர்களுக்கு பயிற்சி கொடுத்தேன்.

3 வருட பயிற்சிக்கு பிறகு இப்போது நடிக்கிறார்கள்.  வீரமான சிறுவர்கள், பெண்களின் சாகசத்தை ஹாலிவுட் படங்களில்தான் பார்க்கிறோம். அப்படி ஒரு படத்தை நம்மாலும் தர முடியும் என்பதை நிரூபிப்போம். மகன்களுக்கு பயிற்சி அளித்த நான்தான் படத்திலும் அவர்களுக்கு பயிற்சிளிக்கும் கோச்சராகவும் நடிக்கிறேன். என்றார்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
படமாகும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை.!
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்!
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
கர்ணன் படத்தை முதலில் நிராகரித்த விக்ரம், பின்னர் ஒப்புக்கொள்ள இதுதான் காரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions