பிரபலம் ஆவதற்காகவே சஞ்சய்கபூர் என்னை மணந்தார்: கரீஷ்மா கபூர்

Bookmark and Share

பிரபலம் ஆவதற்காகவே சஞ்சய்கபூர் என்னை மணந்தார்: கரீஷ்மா கபூர்

இந்தி நடிகை கரீஷ்மா கபூர் 2003–ம் ஆண்டு மும்பை தொழில் அதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு சமைரா என்ற மகளும், சியான் என்ற மகனும் இருக்கிறார்கள்.

கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து விட்டனர். கடந்த 5 வருடங்களாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். பாந்த்ரா குடும்பநல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 41 வயதான கரீஷ்மாகபூர் தொழில் அதிபர் சஞ்சய் கபூர் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக மும்பை கார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுபற்றி கூறிய சஞ்சய்கபூர், ‘‘பணத்துக்காகவே கரீஷ்மாகபூர் என்னை திருமணம் செய்தார்’’ என்று கூறினார்.

அவருக்கு பதில் அளித்துள்ள கரீஷ்மாகபூர், கணவர் மீது புதிதாக அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார். அவை வருமாறு:–

சஞ்சயின் தாயார் ஒரு உடையை கொடுத்து அணியச் சொன்னார். அது சிறியதாக இருந்ததால் அணிய முடியவில்லை. நான் தயங்கினேன். உடனே சஞ்சய்கபூர் அவரது தாயாரை என் கன்னத்தில் அறையச் சொன்னார்.

என் மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவனை ஊரில் விட்டு விட்டு இளவரசர் வில்லியமுடன் போலோ விளையாட இங்கிலாந்து செல்ல முடிவு எடுத்தார்.

திருமணத்துக்கு முன்பு என் சொத்துக்கள் எவ்வளவு என்று கணக்கு போட்டார். நான் பிரபல நடிகை என்பதற்காகவே என்னை திருமணம் செய்தார். இதன் மூலம் பிரபலம் ஆக நினைத்தார். திருமணத்துக்கு முன்பே என் தாயை அழவைத்தார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post your comment

Related News
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions