மாமியார் மீது இந்தி நடிகை கரீஷ்மா கபூர் வரதட்சணை புகார்

Bookmark and Share

மாமியார் மீது இந்தி நடிகை கரீஷ்மா கபூர் வரதட்சணை புகார்

பிரபல இந்தி நடிகை கரீஷ்மா கபூருக்கும், தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு மும்பையில் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் இருக்கின்றனர். சுமுகமாக சென்று கொண்டிருந்த இந்த தம்பதியினரின் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது.

கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர சம்மதத்தின்பேரில், அவர்கள் இருவரும் விவாகரத்து கோரி மும்பை பாந்திரா குடும்பநல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்தநிலையில், சஞ்சய் கபூரும், அவரது தாயார் ராணி கபூரும் சேர்ந்து தன்னை வரதட்சணை கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், மன ரீதியாக மிகவும் துன்புறுத்தியதாகவும் கூறி 41 வயது நடிகை கரீஷ்மா கபூர், கார் போலீசில் புகார் மனு அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதன்பேரில், போலீசார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கரீஷ்மா கபூரின் கணவர் சஞ்சய் கபூர் மற்றும் மாமியார் ராணி கபூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனால், தனது மீதான இந்த குற்றச்சாட்டை சஞ்சய் கபூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ஒரு மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக, குடும்பத்துக்கு நல்ல மருமகளாக இருக்க கரீஷ்மா கபூர் தவறிவிட்டார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு தான் அவர் என்னை திருமணம் செய்தார். தற்போது அதே பணத்துக்காக குழந்தைகளை அவர் பகடைக்காயாக பயன்படுத்துகிறார்’’ என்றார்.

இதேபோல், தன்னுடைய வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட தந்தையை வீட்டில் வைத்து பராமரிக்க கரீஷ்மா கபூர் இடம்கொடுக்கவில்லை என்றும் சஞ்சய் கபூர் குற்றம்சாட்டினார்.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions