ஐரோப்பா செல்லும் நாகார்ஜுனா-கார்த்தி

Bookmark and Share

ஐரோப்பா செல்லும் நாகார்ஜுனா-கார்த்தி

தெலுங்கு இயக்குனர் வம்ஷி இயக்கத்தில் நாகர்ஜூனா-கார்த்தி இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை பி.வி.பி.சினிமா பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்து வருகிறார். 

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஐரோப்பா செல்லவுள்ளனர். தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களில் இதுவரை எந்த படப்பிடிப்பு குழுவினரும் சென்றிராத செர்பியா நாட்டின் தலைநகரமான பெல்கிரேட் நகரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. 

இதைத் தொடர்ந்து பாரிஸ் நகரத்திலும், லயோன் நகரத்திலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். 30 நாட்கள் தொடர்ந்து வெளிநாட்டிலேயே படமாக்கவுள்ளனர். இதன்பிறகு படத்தின் பெரும்பகுதி முடிந்துவிடும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 

பி.எஸ்.வினோத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வெளிநாட்டில் சில சண்டைக் காட்சிகளையும், கார் சேசிங் காட்சிகளையும் படமாக்குகின்றனர். இந்த சண்டைக் காட்சிகள் இதுவரை கண்டிராத சண்டைக் காட்சிகளாக இருக்கும் என்று இயக்குனர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - ரகுல் ப்ரீத் சிங்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions