கார்த்தியின் வட சென்னை சென்ட்டிமெண்ட்

Bookmark and Share

கார்த்தியின் வட சென்னை சென்ட்டிமெண்ட்

பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் முழுப்படப்பிடிப்பும் வட சென்னை ஏரியாவிலேயே நடைபெற்றது. அப்படத்தின் கதைக்களமும் வட சென்னை பகுதிகள் என்பதால் மெட்ராஸ் படத்தை அங்கேயே எடுத்தார்கள்.

மெட்ராஸ் படம் வெற்றிபெற்ற சென்ட்டிமெண்ட் காரணமாகவோ என்னவோ, கார்த்தியின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பும் வட சென்னையிலேயே நடைபெறுகிறது.

விஜய்சேதுபதி நடித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தைத் இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 'காஷ்மோரா' என்ற படத்தில் நடிக்கிறார் கார்த்தி.  

கொம்பனுக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், ஸ்ரீதிவ்யாவும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவை ஓம்பிரகாஷும், இசையை சித்தார்த் விபினும் கவனிக்கிறார்கள்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் 'காஷ்மோரா'வின் படப்பிடிப்பு வடசென்னையில் உள்ள திருவொற்றியூரில் தொடங்குகிறது.

கார்த்தி, ஸ்ரீதிவ்யா, உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கும் இப்படப்பிடிப்பிற்காக திருவொற்றியூரில்  பிரம்மாண்டமான செட் ஒன்றும் போடப்பட்டுள்ளதாம். விரைவில் நயன்தாராவும் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.


Post your comment





Related News
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - ரகுல் ப்ரீத் சிங்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions