நடிகர் சங்க தேர்தலை ராதாரவி போர்க்களமாக மாற்றி விட்டார்: நடிகர் கார்த்தி பேச்சு

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தலை ராதாரவி போர்க்களமாக மாற்றி விட்டார்: நடிகர் கார்த்தி பேச்சு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால், நாசர் அணியை சேர்ந்த திரைப்பட நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், ராஜேஷ், விக்னேஷ், ஜூனியர் பாலையா, நடிகைகள் சோனியா, கோவை சரளா, குட்டி பத்மினி ஆகியோர் கரூர் மாவட்ட நாடக நடிகர்களை சந்தித்து 2–ம் கட்டமாக வாக்கு சேகரித்தனர். 

அப்போது பேசிய நடிகர் கார்த்தி, “ குடும்ப பிரச்சனைகளை மறந்து மக்களை சந்தோஷப்படுத்துவதற்காக நடிக்கும் நாடக நடிகர்கள் பாக்கியசாலிகள். நாடக நடிர்கள் எத்தனையோ பேர் இன்று கஷ்டப்படுகிறார்கள். வயதான நாடக நடிகர்களுக்கு பென்சன் ஏற்பாடு செய்து தரப்படும். 

நோய் வாய்பட்டவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். கலைஞர்களுக்கு என்று நாங்கள் கேட்டதும் பலரும் உதவ முன்வருகிறார்கள். ஆனால் பொறுப்பில் இருந்தவர்கள் ஏன் இதை செய்யவில்லை? 

5 பேராக தொடங்கிய இந்த அணிக்கு இப்போது 1500 பேர் வேலை செய்கிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் ஷோரூமாகவும், தியேட்டராகவும் இருந்து என்ன பயன்? நாங்கள் வெற்றி பெற்றால் நாடக நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் குறைந்த வாடகைக்கு தங்கி, உணவு அருந்தவும் ஏற்பாடு செய்யப்படும்.

திரைப்பட நடிகர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்ச்சித்த போது சரத்குமார் சார் கண்டிக்கவில்லை. நடிகர் சங்க தேர்தலை போர்க்களமாக மாற்றியது ராதாரவி தான்”. என்று பேசினார்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions