மகேஷ் பாபுவிற்கு பதில் கார்த்தி

Bookmark and Share

மகேஷ் பாபுவிற்கு பதில் கார்த்தி

கோலிவுட்டின் பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படம் நீண்ட நாட்களுக்கு பின்னர் மணிரத்தனத்திற்கு வெற்றி படமாக அமைந்தது.

அப்படத்திற்கு முன்னரே டோலிவுட் நடிகர்கள் நாகார்ஜுனா, மகேஷ் பாபு நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், ஸ்ருதிஹாசன் போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது அப்படத்தை மீண்டும் கையிலெடுக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளார். ஆனால் மகேஷ் பாபுவிற்கு பதில் கார்த்தியையும் நாகார்ஜுனாவிற்கு பதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

நடிகைகளில் எவ்வித மாற்றமின்றி ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் ஸ்ருதிஹாசனே நடிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. நடிகர் கார்த்தி தற்போது நாகார்ஜுனாவுடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார்.


Post your comment





Related News
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - ரகுல் ப்ரீத் சிங்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions