70 நிமிட VFX காட்சிகளுடன் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!

Bookmark and Share

70 நிமிட VFX காட்சிகளுடன் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!

கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துவரும் படம் கஷ்மோரா. இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

நடிகர் கார்த்தி முதல்முறையாக மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகை நயன்தாரா ராணியாகவும் ஸ்ரீ திவ்யா பத்திரிக்கையாளராகவும் நடித்து வருகிறார்கள்.

கோச்சடையான் மற்றும் மாற்றான் படங்களில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் இந்த படத்திலும் பயன்படுத்தப்படுவதாகவும் இதுதொடர்பான காட்சிகள் படத்தில் மொத்தம் 15 நிமிடங்கள் இடம்பெறும் எனவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இதுபோக இப்படத்தில் மொத்தம் 70 நிமிட VFX காட்சிகள் இடம்பெற போவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. இந்த காட்சிகளை மொத்தம் 17 பிரம்மாண்ட அரங்கங்களில் படம்பிடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது 60% நிறைவடைந்துள்ளது. மேலும் படம் செப்டம்பர் முதல் வாரம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions