புரட்சிப் புயல் ஆகிறார் கார்த்தி!

Bookmark and Share

புரட்சிப் புயல் ஆகிறார் கார்த்தி!

நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள். பொதுவாக நடிகர்களின் பிறந்தநாள் அன்று அவரது வீட்டைச்சுற்றி பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டுப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

அதன்படி இன்று பிறந்தநாள் காணும் கார்த்தியை வாழ்த்தும்வகையில் அவரது ரசிகர்கள் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அவற்றில் சொல்லி வைத்ததுபோல் பல போஸ்டர்களின் புரட்சிப்புயல் கார்த்தி என்று அடைமொழியோடு கார்த்தியை வாழ்த்தி உள்ளனர் அவரது ரசிகர்கள்.

இந்த புரட்சிப்புயல் பட்டம் பற்றி ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. சூர்யா நடிக்க வந்த சில ஆண்டுகளில் அவரது ரசிகர் மன்றத்தினர் இதே புரட்சிப்புயல் பட்டத்தை சூர்யாவுக்கு வழங்கினர்.

அந்தப் பட்டம் சூர்யாவுக்கும் பிடித்துப்போக அதை அவரும் பயன்படுத்த ஆரம்பித்தார். அரசியல்களத்தில் இந்த புரட்சிப்புயல் பட்டம் பிரபல அரசியல்கட்சியின் இரண்டெழுத்து தலைவரை குறிக்கும்.

அவரது கட்சியினர்தான் புரட்சிப்புயல் பட்டத்தை பரவலாக பயன்படுத்தி வந்தனர். இந்தப்பட்டத்தை சூர்யா பயன்படுத்துவதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இது பற்றி சூர்யாவின் தந்தை சிவகுமாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

புரட்சிப்புயல் பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சிவகுமார். இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் தனக்கு எந்த அடைமொழியும் வேண்டாம் என சூர்யா முடிவு செய்தார்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions