கார்த்தியின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?

Bookmark and Share

கார்த்தியின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் ஜூலையில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கார்த்தி அடுத்ததாக அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் ஒரு கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல்பிரீத்தி சிங் நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் இணைந்து நடித்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

கார்த்தி, ரஜத் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு `தேவ்' என்னும் பெயரை சூட்டலாம் என்று ஆலோசனை நடக்கிறது. கார்த்தியின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions