அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கார்த்தி அனுஷ்கா !

Bookmark and Share

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கார்த்தி அனுஷ்கா !

அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடந்த சூட்டிங்கில் பங்கேற்ற கார்த்தி-அனுஷ்கா உள்ளிட்ட படக்குழுவினர், யானைகள் கூட்டத்திடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சகுனி படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்து, சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் சூட்டிங் கேரளா மாநிலம் சாலக்குடியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஒருமாத காலமாக பங்களா போன்று செட் அமைத்து சூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.

சூட்டிங் நடந்து வரும் இடம், காட்டு யானைகள் அடிக்கடி கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் இடமாகும். யானைகள் எப்போது வரும் என்றே சொல்லமுடியாது என்று இப்பகுதி மக்கள், ஏற்கனவே படப்பிடிப்பு குழுவுக்கு எச்சரிக்கை செய்து இருந்தனர். இதனால் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை சுற்றி காவலர்களை போட்டு சூட்டிங்கை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார்த்தி-அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்தில், காட்டு யானைகள் கூட்டமாக வந்து, சூட்டிங் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த செட் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி தும்சம் செய்தன. இதனால் கார்த்தி-அனுஷ்கா உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து கார்த்தி கூறுகையில், சூட்டிங் முடிந்து நாங்கள் புறப்பட்டு சென்ற கொஞ்ச நேரத்தில், அங்கு யானைகள் கூட்டம் வந்தது பற்றி படக்குழுவினர் என்னிடம் தெரிவித்தார்கள். சூட்டிங் ஸ்பாட்டை விட்டு கொஞ்சம் தாதமாக கிளம்பியிருந்தால் எங்களையும் யானைகள் கூட்டம் தாக்கியிருக்கும். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பின் போது, இதே சாயல்குடி காட்டுபகுதியில் தான் படமாக்கினோம். நல்ல அழகான இடம் அது என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்.." சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்
தனுஷ், அனுஷ்காவுடன் இணைந்த கௌதம் மேனன்!
காதல் திருமணம் குறித்து அனுஷ்கா கருத்து தெரிவித்துள்ளார்!
விசாகப்பட்டணத்தில் தொடங்கும் சூர்யாவின் சிங்கம் 3
லிங்கா படத்தில் ரஜினி பஞ்ச் வசனம்
தமன்னா அனுஷ்கா கடும் போட்டி!
நடிகை அனுஷ்காவின் டார்லிங்!
3 D படம் : அனுஷ்காவுக்காக காத்திருக்கும் இயக்குநர்
ஆந்திராவில் அனுஷ்காவிற்கு நடந்ததென்ன? அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions