நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் ரத்ததானம்

Bookmark and Share

நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் ரத்ததானம்

நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் அவரது பிறந்த நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள். தமிழகம் முழுவதும் கார்த்தி ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம், அன்னதானம் முகாம்கள் நடந்தன. 

ஏழைகளுக்கு உணவு வழங்குவதல் மாணவ – மாணவர்களுக்கு நோட்டு புத்தங்கள் வழங்குதல் மரக்கன்றுகள் நடுதல், நீர்மோர் பந்தல் அமைத்தல் ஆதரவற்ற ஆசிரமங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் உதவி பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. 

சென்னை மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் அரசு மருத்துவமனையிலும் முகப்பேரிலும் ரத்தான முகாம்கள் நடந்தன. இதில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தார்கள். 

அகில இந்திய கார்த்தி மக்கள் நல மன்ற தலைவர் ஆ.பரமு, காப்பாளர் ஆர். ஏ.ராஜ் செயலாளர் வீரமணி தென் சென்னை மாவட்ட தலைவர் எம்.கே.பி. சந்தோஷ் வடசென்னை மாவட்ட தலைவர் நித்தியா மத்திய சென்னை மாவட்ட தலைவர் மதன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆனந்த் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர். 

கார்த்தி தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்து வருகிறார். வம்சி இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. மேலும், கோகுல் இயக்கும் ‘கஷ்மோரா’ படத்திலும் நடிக்கிறார். 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions