5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் மோதும் தனுஷ், கார்த்தி!

Bookmark and Share

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் மோதும் தனுஷ், கார்த்தி!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் அணுமின் நிலையம்தான் இப்படத்தின் மையக்கரு என சொல்லப்படுகிறது. ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் கார்த்தியின் காஷ்மோரா படமும் வெளியாகவுள்ளது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷும் கார்த்தியும் மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் மோதுகின்றனர். இதற்குமுன்பு தனுஷின் ஆடுகளமும் கார்த்தியின் சிறுத்தையும் ஒரேநாளில் வெளியாகியிருந்தது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions