தெலுங்கு சூப்பர்ஸ்டாருடன் மோதும் கார்த்தி?

Bookmark and Share

தெலுங்கு சூப்பர்ஸ்டாருடன் மோதும் கார்த்தி?

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான காற்று வெளியிடை ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கார்த்தி தற்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார்.

சிறுத்தை படத்திற்கு போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் படம் என்பதால் இப்படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.பெரும்பாலும் ராஜஸ்தானிலே படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையில், சத்யன்சூரியன் ஒளிப்பதிவில் காட்சிகள் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இப்படத்தை, தசராவை முன்னிட்டு செப்டம்பர் இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தசரா விடுமுறை நாளில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' படமும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள `ஸ்பைடர்' படமும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார்த்தியும் அந்த ரேசில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
அண்ணனின் தயாரிப்பில் கடைக்குட்டி சிங்கமான கார்த்தி.!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் பிரம்மாண்ட இசையமைப்பாளர் - ரசிகர்கள் குஷி.!
ஓவியாவின் நிலையால் அதிர்ச்சியான சிவகார்த்திகேயன்.!
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
அசோக் மரணத்தால் தன்னுடைய பட தயாரிப்பாளருக்கு சிவா செய்த வேலை - வெளிவந்த ரகசியம்.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?
இந்த வருட டாப் 5 நடிகர், நடிகைகள் யார்? - அதிர்ச்சியூட்டும் கருத்து கணிப்பு முடிவு.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions