கார்த்தி பிறந்தநாளையொட்டி ரத்ததானம், அன்னதானம் செய்த ரசிகர்கள்!

Bookmark and Share

கார்த்தி பிறந்தநாளையொட்டி ரத்ததானம், அன்னதானம் செய்த ரசிகர்கள்!

நடிகர் கார்த்தி-க்கு இன்று பிறந்தநாள். கார்த்தி தனது ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும்  ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வரிசையில் இந்த வருடமும் ஏழை-எளியவர்களுக்கு தனது ரசிகர் மன்றம் மூலமாக உதவி செய்து வருகிறார்.

கார்த்தி பிறந்தநாளையொட்டி, கார்த்தி ரசிகர் மன்றம் மூலமாக இன்று காலை 11 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு 200 போர்வை வழங்கப்பட்டது. இதையடுத்து, 11.30 மணிக்கு அரசு பொது மருத்துவமனையில் ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். பின்னர் 12.30 மணிக்கு வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஆதரவற்ற பிள்ளைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

பகல் 1 மணிக்கு திருவான்மியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதேநேரத்தில் பாடி கோவிலும் பொதுமக்களுக்கு அன்னதான ஏற்பாடும் செய்திருந்தனர். பின்னர், மாலை 3 மணிக்கு ராயப்பேட்டை, ஓட்டேரி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெறுகிறது.

முன்னதாக, கார்த்தி இன்று தனது பிறந்தநாளை கஷ்மோரா படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது, நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர். மேலும், பல்வேறு திரையுலக கலைஞர்களும் கார்த்திக்கு சமூக இணையதளம் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Post your comment

Related News
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions