வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி

Bookmark and Share

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி

கார்த்தி தற்போது ‘காஷ்மோரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் விவேக் இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளார். கோகுல் இயக்கி வரும் இப்படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மணிரத்னம் படத்திற்கு முன்பே 'சதுரங்க வேட்டை' பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இதுகுறித்து கார்த்தி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 'கார்த்தி நடித்து வரும் 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் முடிவடையவுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறியிருக்கிறார்கள். மேலும் வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்கள்.


Post your comment





Related News
​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
விஜய், அஜித் பட சாதனையை முறியடித்த கார்த்தி!
ஒரு நடிகராக கார்த்தி நிறையவே வளர்ந்துள்ளார் – புகழும் தமன்னா !
‘தோழா’ மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க காத்திருக்கும் நாகர்ஜுனா!
சூர்யா இடத்தை பிடித்த கார்த்தி!
தோழா படத்திற்கு சென்சாரில் யூ சான்றிதழ்!
சூர்யாவிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன? – கார்த்தி பதில்
S3 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி!
சூர்யாவால் தூக்கத்தை தொலைத்த கார்த்தி!
திரையில் முதல்முறையாக இணையும் கௌதம் – கார்த்திக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions