​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.

Bookmark and Share

 ​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.

மாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து   கார்த்தி , ரகுல்  பிரீத்சிங் வெற்றி  ஜோடி மீண்டும்   இப்படத்தில் இணைகிறார்கள் .

மேலும் பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்  .   இவர்களுடன் முக்கிய வேடத்தில்  நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.

இப்படம் மூலம் ரஜத் ரவிசங்கர் டைரக்டராக அறிமுகமாகிறார். கதை திரைக்கதை, வசனம் எழுதும் இவர் ,"எங்கேயும் எப்போதும்" இயக்குநர் சரவணன் ,  ,பிரபல  இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப் ,இயக்குநர்  R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு : R  வேல்ராஜ்

எடிட்டிங் : ரூபன்

கலை : ஜெயஸ்ரீநாராயணன்

ஸ்டன்ட் : அன்பறிவ்

பாடல்கள் : கபிலன் , தாமரை , விவேக்

நிர்வாக தயாரிப்பு : K.V.துரை

அஸோஸியேட்  தயாரிப்பு : ஜெய் ஜெகவீரன்.

பெயரிடப்படாத “ கார்த்தி 17’’ படத்தை   ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட்   வழங்க - பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார் .இவர், சூர்யா நடித்த  சூப்பர் ஹிட்டான :சிங்கம்2” படத்தை தயாரித்தவர் .

தற்போது விரைவில் வெளியாக இருக்கும் திரிஷா  நடிப்பில் R. மாதேஷ் இயக்கத்தில் “மோகினி“ படத்தை தயாரித்து வருகிறார். “#கார்த்தி 17’’ படத்தின் படபிடிப்பு இம்மாதம் 8ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து யுரோப் நாட்டில் 15 நாட்களும் , ஹைதராபாத் , மும்பை , இமயமலை பகுதிகளிலும்  உருவாகிறது.

 

 

 


Post your comment





Related News
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
மசாலா இருக்கு? படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - சூர்யா நாயகி ஓபன் டாக்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
பேண்ட் போட மறந்துடீங்களா? கவர்ச்சி போட்டோவால் சூர்யா பட நடிகைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
இணையத்தில் வைரலாகும் பிரபல தமிழ்பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்!
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions