காஷ்மோராவில் பேயாக நடிக்கும் கார்த்தி!

Bookmark and Share

காஷ்மோராவில் பேயாக நடிக்கும் கார்த்தி!

பருத்தி வீரன் படத்தை அடுத்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை போன்ற வெற்றிப்படங்களில் நடித்த கார்த்திக்கு பின்னர் நடித்த சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி போன்ற படங்கள் தொடர் தோல்விகளாக அமைந்தன.

இந்த நிலையில், மெட்ராஸ், கொம்பன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர், அடுத்தபடியாக வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் மற்றும் கோகுல் இயக்கும் காஷ்மோரா படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில் காஷ்மோரா படத்தில் கார்த்தியுடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை திருவொற்றியூரில் உள்ள கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

மேலும், இதற்கு முன்பு ரொமான்டிக், ஆக்சன், சென்டிமென்ட் கதைகளில் நடித்து வந்த கார்த்தி இந்த படத்தில் பேயாகவும் நடிக்கிறாராம். இந்த த்ரில்லர் படத்தில் சில காட்சிகள் தற்போது படு மிரட்டலாகவும் படமாகிக்கொண்டிருக்கிறதாம்.

ஆக, அண்ணன் சூர்யா நடித்த பேய் படமான மாஸ் ஒர்க்அவுட்டாகாத நிலையில், அவர் தவறவிட்ட வெற்றியையும் சேர்த்து இரட்டிப்பு வெற்றியை இந்த காஷ்மோரா மூலம் ஈட்டி விட வேண்டும் என்று மிரட்டிக்கொண்டிருக்கிறாராம் கார்த்தி. 


Post your comment





Related News
தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!
கார்த்தியின் மைல்கல் படம் இதுதானாம்!
காஷ்மோரா இதைப் பற்றிய கதை தானாம்!
காஷ்மோராவில் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் கார்த்தி?
காஷ்மோரா பட கதை இதுதான் – வெளிவந்த தகவல்!
டீசர் ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்தியின் காஷ்மோரா!
கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பு முடிந்தது!
மாபெரும் பொருட்செலவில் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!
இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கும் கஸ்மோரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions