கார்த்தியின் ராசி நாளில் கொம்பன்!

Bookmark and Share

கார்த்தியின் ராசி நாளில் கொம்பன்!

குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில், கார்த்தி நடித்திருக்கும் கொம்பன் படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக மார்ச் 27ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் ரிலீஸ் தற்போது ஏப்ரல் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உலககோப்பை கிரிக்கெட், ஆண்டுத்தேர்வு, படவேலை பென்டிங் என கொம்பன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றத்துக்கு ஆளுக்கொரு காரணம் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் புதிய தமிழகம் கட்சியின் எதிர்ப்பு காரணமாக தியேட்டர்காரர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் காரணமாகவே படவெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

தான் நடித்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதை நினைத்து வருத்தப்பட வேண்டிய நடிகர் கார்த்தி மிக சந்தோஷமாக இருக்கிறாராம்.கார்த்தியின் சந்தோஷத்திற்கு என்ன காரணமாம்? கொம்பன் ரிலீஸ் ஆக உள்ள ஏப்ரல் 2 ஆம் தேதி கார்த்தியைப் பொறுத்தவரை அவருக்கு மிகவும் ராசியான நாளாம்.

இதனால்தான் ரிலீஸ் தேதி மாறியது குறித்து சந்தோஷத்தில் இருக்கிறாராம் கார்த்தி.  பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என தனது முதல் இரண்டு படங்களிலும் அழுக்குப்பையனாக நடித்துக் கொண்டிருந்த கார்த்தியை மாடர்ன் இளைஞனாக மாற்றியது லிங்குசாமி இயக்கிய பையா படம்தான்.

கார்த்திக்கு வெற்றிப்படமாக அமைந்த பையா படம் வெளியானது 2010 ஆம் வருடம் ஏப்ரல் 2ஆம் தேதிதான்.  ஏப்ரல் 2ஆம் தேதி பையா ராசி கொம்பன் படத்துக்கு வொர்க்அவுட்டாகும் என்று கார்த்தி நம்புகிறார். இதுதான் அவரின் சந்தோஷத்திற்குக் காரணமாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions