பரபரப்பான கார்த்தியின் கதை இலாகா!

Bookmark and Share

பரபரப்பான கார்த்தியின் கதை இலாகா!

கொம்பன் படத்தையடுத்து காஷ்மோரா படவேலைகளில் இறங்கி விட்டார் பருத்தி வீரன் கார்த்தி. இந்த நிலையில் மெட்ராஸ் படத்தின் ஹிட்டுக்குப்பிறகு அவரை வைத்து படம் இயக்க புது வரவு டைரக்டர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதனால் அவரை தற்போது ஓரிரு படங்கள் இயக்கியவர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால் அவரது கதை இலாகா கதை கேட்பதில் முன்பைவிட தீவிரமடைந்துள்ளது.

அப்படி செல்பவர்களிடம் வழக்கம்போல் முதலில் கார்த்தி கதை கேட்பதில்லை. கதை கேட்பதற்கென்றே அவர் வைத்திருக்கும் கதை இலாகாதான் கதை கேட்கிறார்கள். அப்படி அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கதை வீதம் கேட்கிறார்களாம்.

ஒரேநாளில் பல கதைகள் கேட்டால் சரியான முடிவு எடுக்க முடியாது என்பதால் இதை பின்பற்றுகிறார்களாம். இவர்கள் ஓகே என்று தேர்வு செய்யும் கதையை கடைசியில் அனைவரும் உட்கார்ந்து ஒருமுறை கேட்கிறார்களாம்.

அப்போதும் அது திருப்தியாக இருக்கும்பட்சத்தில் அந்த கதையை டிக் அடித்து கார்த்தி பாசறைக்குள் அனுப்பி வைக்கிறார்களாம். அதையடுத்து, அவர் என்றைக்கு ஓய்வாக இருக்கிறாரோ அப்போது அந்த டிக் செய்த கதையை கேட்கிறாராம்.

அதில் அவர் பாஸ் மார்க் கொடுத்தால்தான் அந்த இயக்குனருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறதாம். அந்த வகையில், தற்போது இரண்டு இயக்குனர்கள் கார்ததிக்கிற்கு கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார்களாம்.

அவர்களைத் தொடர்ந்து விஜயசேதுபதி-கிருஷ்ணாவை வைத்து வன்மம் என்ற படத்தை இயக்கிய ஜெய்கிருஷ்ணாவும் இப்போது கார்த்திக்கிற்காக ஒரு ஆக்சன் கதையை ரெடி பண்ணி வைத்துக்கொண்டு கால்சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.. ஆனால் அவருக்கு இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லையாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions