கார்த்தி பிறந்த நாளில் வெளியாகும் காஷ்மோரா படத்தின் பர்ஸ்ட்லுக்!

Bookmark and Share

கார்த்தி பிறந்த நாளில் வெளியாகும் காஷ்மோரா படத்தின் பர்ஸ்ட்லுக்!

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காஷ்மோரா’. இப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் விவேக் இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளார். கோகுல் இயக்கி வரும் இப்படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் 3டி பேஸ் ஸ்கேன் டெக்னாலஜியை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 90 சதவிகிதம் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை கார்த்தியின் பிறந்த நாளான மே 25ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions