கார்த்தி நடிப்பது காப்பியடிக்கப்பட்ட படத்தில் அல்ல

Bookmark and Share

கார்த்தி நடிப்பது காப்பியடிக்கப்பட்ட படத்தில் அல்ல

ஹாலிவுட் படத்தின் கதையைக் காப்பி அடித்து படம் எடுக்கும் இயக்குநர்கள் மத்தியில் தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பாராட்டத்தக்க ஒரு காரியத்தை செய்திருக்கிறார். பிவிபி சினிமா நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் வம்சி.

ஒரு ஆங்கிலப்படத்தின் கதையில் இன்ஸ்ஃபையரான வம்சி, அந்தப்படத்தின் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு முறைப்படி கதையின் உரிமையைப்பெற்றுள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களுள் ஒருவரான நாகார்ஜுனா உடன் நம்ம ஊர் கார்த்தியும் நடிக்கிறார்.

கொம்பன் படத்தை தொடர்ந்து கார்த்தி படம் இதுதான். இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்தது. இப்படத்தில் நாகார்ஜுனா, கார்த்தியுடன் ஸ்ருதிஹாசன், அவாரா சாஸ்திரி, ஜெயசுதா ஆகியோர் நடிக்கின்றனர்.

கார்த்தி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். கதைப்படி படத்தில் 90 சதவிகித காட்சிகளில் வீல்சேரிலேயே இருப்பார் நாகார்ஜுனா. அவரை வைத்து வீல் சேரை தள்ளுபவராக கார்த்தியின் வேடம் அமைக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 16-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார்.  மனம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார். ஹைதராபாத், சென்னை மற்றும் சில வெளிநாடுகளில் படமாக இருக்கிறது. இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் ஜூன் மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார் இப்படத்தினை திரைக்கதை எழுதி இயக்கும் வம்சி. 


Post your comment





Related News
அதிகாரப்பூர்வமற்று திருடப்பட்டதா கார்த்தி பட டைட்டில்? கிளம்பிய சர்ச்சை
கார்த்தி, நாகார்ஜூனா இணையும் படத்தின் தலைப்பு ‘தோஸ்த்’
கார்த்தி, நாகார்ஜுனா இணையும் படத்தின் தலைப்பு வெளியானது
முதல் சுற்றை நிறைவு செய்த கார்த்தி - நாகார்ஜுனா கூட்டணி
கார்த்தி-நாகர்ஜூனா இணையும் படப்பிடிப்பு துவங்கியது
கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் படம் பிரெஞ்ச் திரைப்படத்தின் ரீமேக்...?
கார்த்தி - நாகார்ஜுனாவை இணைத்து புதிய படம்.. பிவிபி சினிமா அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions