ஸ்ருதிஹாசனுக்கு அபராதம் விதிப்பு ?

Bookmark and Share

ஸ்ருதிஹாசனுக்கு அபராதம் விதிப்பு ?

கார்த்தி, நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன் பின் அவர் அதிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கு போடப்பட்டு பின்னர் தமிழ்த் திரையுலக சங்கங்கள் சிலவற்றின் தலையீட்டின் பேரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டு பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டது.

ஆனால், ஸ்ருதிஹாசனால் படத் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்திற்கும், நஷ்டத்திற்கும் என ஸ்ருதிஹாசன் 8 லட்ச ரூபாயை தயாரிப்பாளருக்குத் தர வேண்டும் என சங்கங்கள் அபராதம் விதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய முன் பணத் தொகையான 10 லட்ச ரூபாயையும் உடனே திருப்பித் தரவும் சொன்னார்களாம். அந்த அபராதத் தொகையையும், அட்வான்ஸ் தொகையையும் ஸ்ருதிஹாசன் இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறுகிறார்கள்.

அதனால், அந்தப் பணத்திற்கு அவரை அதே படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வைத்துவிடலாம் என்ற யோசனையை படத்தின் இயக்குனர் வம்சி படிப்பள்ளி முன் வைத்திருக்கிறார்.

இப்போது ஸ்ருதிஹாசன் முன்பணத்தைத் தர முன் வருவாரா அல்லது ஒரு பாடலுக்கு நடனமாட முன் வருவாரா என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தில் எழுந்துள்ளதாம். அதன் பிறகே பிரச்சனை முற்றிலுமாகத் தீரும் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions