முதல் சுற்றை நிறைவு செய்த கார்த்தி - நாகார்ஜுனா கூட்டணி

Bookmark and Share

முதல் சுற்றை நிறைவு செய்த கார்த்தி -  நாகார்ஜுனா கூட்டணி

தெலுங்கு திரையில் தனது மொழிமாற்றுப் படங்களுக்கு வரவேற்பு இருப்பதை அறிந்து கார்த்தி நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வம் கொண்டார். அந்த வகையில் நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிக்க வந்த தெலுங்கு பட வாய்ப்பை நடிகர் கார்த்தி சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

வம்சி இயக்கும் இந்த இரு மொழிப் படத்தை பி.வி.பி. சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் பூஜை ஹைதராபாத்திலும் தமிழ் பதிப்பிற்கான பூஜை சென்னையிலும் நடைபெற்றது.

அதை விட இப்படத்திற்கு மிக பெரிய விளம்பரமாக நடிகை ஸ்ருதிஹாசன் செய்து வைத்தார். முதலில் நாயகியாக இப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட ஸ்ருதிஹாசன் பின்னர் தனக்கு கால்சீட் இல்லை என கூறி இப்படத்திலிருந்து விலகினார்.

அதன் பின்னர் தயாரிப்பு நிறுவனம் ஸ்ருதிஹாசன் மீது பழி சொல்ல, நடிகை ஸ்ருதிஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் மீது பழி சொல்ல என ஓடிக் கொண்டிருந்த இப்பிரச்னை ஒரு வழியாக ஓய்ந்து நடிகை தமன்னா இப்படத்தின் நாயகியாக நடித்து வருகின்றார்.

இவ்வாறு சில பிரச்சனைகள் தொடர்ந்தாலும் படக்குழுவினர் தீயாக செயல்பட்டு இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 2வது வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாம்.

 


Post your comment





Related News
அதிகாரப்பூர்வமற்று திருடப்பட்டதா கார்த்தி பட டைட்டில்? கிளம்பிய சர்ச்சை
கார்த்தி, நாகார்ஜூனா இணையும் படத்தின் தலைப்பு ‘தோஸ்த்’
கார்த்தி, நாகார்ஜுனா இணையும் படத்தின் தலைப்பு வெளியானது
கார்த்தி நடிப்பது காப்பியடிக்கப்பட்ட படத்தில் அல்ல
கார்த்தி-நாகர்ஜூனா இணையும் படப்பிடிப்பு துவங்கியது
கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் படம் பிரெஞ்ச் திரைப்படத்தின் ரீமேக்...?
கார்த்தி - நாகார்ஜுனாவை இணைத்து புதிய படம்.. பிவிபி சினிமா அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions