நடிகர் சங்கத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைக்கா!

Bookmark and Share

நடிகர் சங்கத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைக்கா!

கமல்ஹாசன் மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பூஜை சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இப்படத்தை லைக்கா நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்தின் பூஜையின் போது, லைக்கா நிறுவனம் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி தருவதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராஜு மகாலிங்கம் இன்று அந்த ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளார் கார்த்தி ஆகியோரை சந்தித்து வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் நிர்வாகிகளான ஐசரி கணேஷ், நடிகர் ராஜா ஆகியோரும் உடனிருந்தனர். நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட கமல்ஹாசன் இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions