நடிகர் சங்கம் சார்பில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி சேர்ப்பு

Bookmark and Share

நடிகர் சங்கம் சார்பில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி சேர்ப்பு

வெள்ள நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் இதுவரை ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடிகர் சங்க நிர்வாகிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சரோஜா தேவி, முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் சங்க தலைவர் நாசரிடம் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 

அப்போது நடிகர் சங்கத்திற்கு விரைவில் கட்டடம் கட்டப்படவேண்டும் என்றும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பெயரை மாற்றுவதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் சரோஜா தேவி கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், தற்போது வரை வெள்ள நிவாரண நிதியாக 1 கோடியே பத்து லட்சம் திரட்டப்பட்டுள்ளது எனவும், விரைவில் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்கப்படும் என்றும் கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions