காஷ்மோரா படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய கார்த்தி

Bookmark and Share

காஷ்மோரா படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய கார்த்தி

நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, டுவிட்டர் வலைதளத்தில் இணைந்துள்ளார்.

அத்துடன் ‘புதிய உலகில், புதிய அனுபவத்துக்காக அடியெடுத்து வைத்துள்ளேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி’ என்று அவர் தன்னுடைய முதல் ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கார்த்திக்கு தெரிவித்து வருகின்றனர். 

கார்த்தி தற்போது ‘காஷ்மோரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். கோகுல் இப்படத்தை இயக்கி வருகிறார்.

பிறந்தநாளான இன்று காஷ்மோரா படப்பிடிப்பில் படக்குழுவினருடன் கேட் வெட்டி கொண்டாடியிருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் கார்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions