நவீன கேமராவில் கார்த்தி பட ஷூட்டிங்

Bookmark and Share

நவீன கேமராவில் கார்த்தி பட ஷூட்டிங்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீ திவ்யா நடிக்கும் படம், ‘காஷ்மோரா’. கோகுல் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.  ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  எஸ்.ஆர். பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.  

இந்தப் படத்தில்,  ‘360’ டிகிரி ஆம்னி டைரக் ஷனல் கேமரா ரிக்’ என்ற நவீன கேமரா பயன்படுத்தப்படுகிறது. இந்திய சினிமாவில் இந்த கேமரா பயன்படுத்தப்படுவது இதுதான் முதன் முறை.

இதன் மூலம் எடுக்கப்படும் காட்சிகள் துல்லியமாக இருக்கும். இதில் 7 கேமரா இருக்கும். இதன் மூலம், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் காட்சிகளைத் தெளிவாகக் காட்ட முடியும். கண்ணுக்கு எட்டாத காட்சிகளையும், எல்லா திசைகளிலும் சுழன்று இதைக் கொண்டு படமாக்க முடியும் என்று படக்குழு தெரிவித்தது.'

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions