கொம்பனின் என் பாத்திரம் பருத்திவீரனுக்கு நேர் எதிராக இருக்கும்! - கார்த்தி

Bookmark and Share

கொம்பனின் என் பாத்திரம் பருத்திவீரனுக்கு நேர் எதிராக இருக்கும்! - கார்த்தி

பருத்திவீரனில் நான் நடித்த பாத்திரத்துக்கு நேர் எதிராக கொம்பன் பாத்திரம் இருக்கும். மாமனார் மருமகன் பாசத்தை புதிய கோணத்தில் காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார் நடிகர் கார்த்தி. ‘குட்டிப்புலி' படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் கொம்பன்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. பின்னர், படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.படம் குறித்து நடிகர் கார்த்தி கூறுகையில், "பருத்தி வீரனுக்குப் பிறகு கிராமத்துக் கதைகளைத் தேர்வு செய்வதில் எனக்கு தயக்கம் இருந்தது. காரணம், அந்த சாயலிலேயே நடிப்பதாக குற்றச்சாட்டு வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் குட்டிப்புலி முத்தையா இந்தக் கதையைச் சொன்னபோது ரொம்பப் பிடிச்சிருந்தது.

கொம்பனில் நான் குடிகாரனில்லை, பருத்திவீரனுக்கு நேர் எதிரானவன். இந்தப் படத்தில் எனக்கு மாமனாராக நடித்துள்ள ராஜ்கிரணும், அம்மாவாக நடித்துள்ள கோவை சரளாவும் படத்துக்கு மிக அழுத்தமான உணர்வைக் கொடுத்துள்ளனர்," என்றார்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ராஜ்கிரண் கூறுகையில், "இந்தப் படம் பார்த்த பிறகு யாராவது ஒரு மாமனார் - மருமகன் ஈகோ மோதலத் தவிர்த்தாலே போதும்.. அதுதான் இந்தப் படத்தின் வெற்றி," என்றார்.இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகி லட்சுமி மேனன் வரவில்லை. ப்ளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டிருப்பதால் அவரால் வரமுடியவில்லையாம்.


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions